கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
கலக்கம் இல்லாது செய்வான் - பெரும்
சேனை தலைநின்று போர்செய்யும் போதினில்
தேர் நடத்திக் கொடுப்பான் - எந்தன்
ஊனை வருந்திடு நோய் வரும் போதினில்
உற்ற மருந்து சொல்வான் - நெஞ்சம்
ஈனக் கவலைகளை எய்திடும் போதினில்
இதன்சொல்லி மாற்றிடுவான்
பிழைக்கும் வழி சொல்ல வேண்டும் என்றால்
ஒரு பேச்சினிலே சொல்லிடுவான் :)
உழைக்கும் வழிவினை யாளும் வழிப்பயன்
உண்ணும் வழி உரைப்பான்
அழைக்கும் பொழுதினிற் போக்கு சொல்லாமல்
அறை நொடிக்குல் வருவான் :)
மழைக்கு குடை. பசி நேரத்து உணவேன்ற்ரன்
வாழ்வினுக் கேன்கள் கண்ணன்
கேட்ட பொழுதினில் பொருள் கொடுப்பான்; சொல்லும்
கேலி போருத்திடுவான் - எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
ஆறுதல் செய்திடுவான் - என்றன்
நாட்டத்திரக் கொண்ட குறிப்பினை இதோ என்று
நான் சொல்லும் முன் உணர்வான் - அன்பர்
கூட்டத்திலே இந்தக் கண்ணனை போல் அன்பு
கொண்டவர் வேறுளரோ?
உள்ளத்திலே கருவம் கொண்ட போதினில்
ஓங்கி அடித்திடுவான் - நெஞ்சில்,
கள்ளத்தை கொண்டு ஒரு வார்த்தை சொன்னால் அங்கு
காரி உமிழிந்திடுவான் - சிறு
பள்ளத்திலே நெடு நாள் அழுகுங் கெட்ட
பாசியை ஏற்றி விடும் - பெரும்
வெள்ளத்தைப் போல் அருள் வார்த்தைகள் சொல்லி
மெலிவு தவிர்த்திடுவான்
சின்னக் குழந்தைகள் போல் விளையாடிச்
சிரித்துக் களிதிடுவான் - நல்ல
வண்ண மகளீர் வசப்படவே பல
மாயங்கள் சூழ்ந்திடுவான் - அவன்
சொன்ன படி நடவாவிடிலோ மிகத்
தொல்லை இழைதிடுவான் - கண்ணன்
தன்னை இழந்து விடல், ஐயகோ! பின்
ஜகத்தினில் வாழ்வதிலேன்?
கோபத்திலே ஒரு சொல்லிற் சிரித்துக்
குலுங்கிடச் செய்திடுவான் - மனச்தாபத்திலே
ஒன்று செய்து மகிழ்ச்சி
தழைத்திடச் செய்திடுவான் - பெரும்
ஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்று
அதனை விலக்கிடுவான் - சுடர்
தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும்
தீமைகள் கொன்றிடுவான்
உண்மை தவறி நடப்பவர் தம்மை
உதைத்து நசுக்கிடுவான் - அருள்
வன்மையினால் மாத்திரம் அவன் பொய்கள்
மலை மலையாய் உரைப்பான்; நல்ல
பெண்மை குணமுடையவன் ; - சிலே நேரத்தில்
பித்தர் குணமுடயவன் ; - மிகத்
தன்மை குணமுடயவன் ; - சில நேரம்
தழலின் குணமுடயவன்.
கொள்ளுங் கொலைக்கு அஞ்சிடாத மறவர்
குணமிகத் தானுடை யான் ; - கண்ணன்
சொல்லும் மொழிகள் குழந்தைகள் போல்
ஒரு சூதரியாது சொல்வான் - என்றும்
நல்லவருக்கு ஒரு தீங்கு நண்ணாது
நயமுறக் காத்திடுவான்